வியாழன், செப்டம்பர் 10, 2015

குறள் எண்: 0039 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 004 - அறன் வலியுறுத்தல்; குறள் எண்: 0039}அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழு மில

விழியப்பன் விளக்கம்: அறத்தின் வழியால் கிடைப்பவையே இன்பம்; மற்றவை எல்லாம் துன்பங்களாகும், அது புகழாய் இருப்பினும் கூட.

(அது போல்...)

ஊழலற்ற வழியில் சம்பாதிப்பவையே மனநிறைவைத் தரும்; மற்றவை எல்லாம் இன்னல்கள், அது மாளிகையே ஆயினும் கூட.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக