செவ்வாய், செப்டம்பர் 15, 2015

குறள் எண்: 0044 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 02 - இல்லறவியல்; அதிகாரம்: 005 - இல்வாழ்க்கைகுறள் எண்: 0044} 

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்

விழியப்பன் விளக்கம்: தீவினைக்கு அஞ்சி, அறமுணர்ந்து சேர்த்ததைப் பகிர்ந்துண்ணும் தன்மையிருப்பின்; நம்வாழ்வு, என்றைக்கும் முடிந்து போவதில்லை.

(அது போல்...)

மனசாட்சிக்குப் பணிந்துப், பொதுநலத்துடன் அதிகாரத்தைப் பகிரும் இயல்பிருப்பின்; ஓர்அரசாட்சி எந்த தேர்தலிலும் தோற்காது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

2 கருத்துகள்:

  1.  தீவினைக்கு அஞ்சி பகிர்ந்துண்டு வாழும் தன்மையிருப்பின், நம்வாழ்க்கை என்றைக்கும் முடிந்து போவதில்லை
    Like like like.

    பதிலளிநீக்கு