சனி, ஜூலை 09, 2016

குறள் எண்: 0342 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0342}

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல

விழியப்பன் விளக்கம்: ஒருவர் துன்பமின்றி இருக்க - ஒன்றின் மீதான பற்றை, அது இருக்கும்போதே துறக்கவேண்டும்; அப்படித் துறந்தபின், பற்பல இன்பங்கள் கூடும்.
(அது போல்...)
ஓர்அரசு தோல்வியின்றி தொடர - ஊழலின் ஆணி வேரை, ஆட்சி உள்ளபோதே களையவேண்டும்; அப்படிக் களைந்தபின், பெரிய வெற்றிகள் சேர்ந்திடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக