வெள்ளி, ஜூலை 15, 2016

குறள் எண்: 0348 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0348}

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

விழியப்பன் விளக்கம்: அனைத்தையும் துறந்தவரே உயர்ந்தோவர்ர் ஆவர்; ஆசைவலையில் மயங்கி சிக்கியோர், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்போராவர்.
(அது போல்...)
அனைவரையும் பாதுகாப்பவரே நல்லாட்சியாளர் ஆவர்; குடும்பநலனில் நிலைத்தவறிச் சிதறியோர், அவர்களுக்கு தாழ்ந்த நிலையில் உள்ளவராவார்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக