வியாழன், ஜூலை 14, 2016

குறள் எண்: 0347 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0347}

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

விழியப்பன் விளக்கம்: பல்வகைப் பற்றுகளை, விடமுடியாமல் பற்றிக்கொண்டு உழல்வோரை; துன்பங்களும், விடாமல் பற்றிக்கொண்டிருக்கும்.
(அது போல்...)
பல்வேறு தீவினைகளை, விலக்கமுடியாமல் பழக்கிக்கொண்டு வாழ்வோரை; தீக்குணங்களும், விலகாமல் சூழ்ந்துகொண்டிருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக