திங்கள், ஜூலை 11, 2016

குறள் எண்: 0344 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0344}

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறப்பதே, தவத்தின் இயல்பாகும்; பற்றுகள் இருப்பின், பிறவற்றின் மீதான மயக்கத்தை மீண்டும் அளிக்கும்.
(அது போல்...)
அகங்காரத்தை அழிப்பதே, அன்பின் அடிப்படையாகும்; அகங்காரம் இருப்பின், உறவுகளின் மீதான ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக