செவ்வாய், ஜூலை 12, 2016

குறள் எண்: 0345 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0345}

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

விழியப்பன் விளக்கம்: பிறப்பெனும் துன்பத்தை அறுக்க எண்ணுவோர்க்கு; உடம்பே அதீதமாகும்! பின்னெதற்கு, உடம்போடு தொடர்புடைய பற்றுகள் எல்லாம்?
(அது போல்...)
தானெனும் அகந்தையை அழிக்க விரும்புவோர்க்கு; சுய-சிந்தனையே போதுமானது! பிறகெப்படி, சிந்தனையை வியாபாரமாக்கும் நிறுவனங்கள் வளர்கின்றன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக