சனி, ஜூலை 16, 2016

குறள் எண்: 0349 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்அதிகாரம்: 035 - துறவுகுறள் எண்: 0349}

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

விழியப்பன் விளக்கம்: பற்றுகளைத் துறந்தோரே, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவர்; மற்றவர்கள், நிலையற்ற வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருப்பர்.
(அது போல்...)
சாதிவெறி இல்லாதோரே, மிருகத் தன்மையிலிருந்து விலகிடுவர்; மற்றவர்கள், பரிணாம வளர்ச்சியின்றி மிருகத்தன்மையோடு இருப்பர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக