புதன், ஜனவரி 04, 2017

குறள் எண்: 0521 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0521}

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள

விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும்; அவரின் முடிந்த வாழ்வியலைப் பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும்; அவரின் சிறந்த ஆட்சியை நினைவுகூர்ந்து வியக்கும் இயல்பு, மக்களிடம் இருக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக