சனி, ஜனவரி 07, 2017

குறள் எண்: 0524 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0524}

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின் உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வது ஆகும்.
(அது போல்...)
ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிரந்தரமான புகழ்; அவரின் எண்ணம் மற்றும் செயலில், பொதுநலத்தைச் சேர்ப்பது ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக