ஞாயிறு, ஜனவரி 29, 2017

குறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0546}

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்

விழியப்பன் விளக்கம்: அரசாட்சிக்கு வெற்றியைத் தருவது, வேல் இல்லை! அரசனின் செங்கோலே முதற்காரணம்; மேலும், அச்செங்கோலும் சார்பில்லாமல் இருக்கவேண்டும்!
(அது போல்...)
குடும்பத்திற்கு சிறப்பு சேர்ப்பது, சொத்து இல்லை! உறுப்பினர்களின் தன்னொழுக்கமே முதன்மை; மேலும், அவ்வொழுக்கமும் குறையில்லாமல் இருக்கவேண்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக