ஞாயிறு, ஜனவரி 08, 2017

குறள் எண்: 0525 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0525}

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்

விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது மற்றும் இன்மொழியில் பேசுவது - இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
நல்லதைச் செய்வது மற்றும் எளிமையாய் இருப்பது - இரண்டையும் பின்பற்றினால்; சிறந்த தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக