ஞாயிறு, ஜனவரி 22, 2017

குறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0539}

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

விழியப்பன் விளக்கம்: நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
நம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல் இழந்தவர்களை, நினைவு கூறவேண்டும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக