செவ்வாய், ஜனவரி 10, 2017

குறள் எண்: 0527 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0527}

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

விழியப்பன் விளக்கம்: காக்கையைப் போல், மறைக்காமல் சுற்றத்தை அழைத்துக் கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணும்; குணம் உள்ளவருக்கே, செல்வம் உள்ளதாகும்.
(அது போல்...)
ஆசிரியரைப் போல், மறுக்காமல் மாணாக்கர்களைச் சேகரித்துக் கற்றத்தைப் கற்பித்து மகிழும்; முனைப்பு உடையவருக்கே, ஞானம் உள்ளதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக