ஞாயிறு, ஜனவரி 15, 2017

குறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0532}

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

விழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்; மறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.
(அது போல்...)
தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, மனிதத்தைச் சிதைக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக