வியாழன், ஜனவரி 26, 2017

குறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0543}

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

விழியப்பன் விளக்கம்: பண்பில் சிறந்தோர் கற்கும் மறைநூல்களுக்கும், அவர்களின் அறத்திற்கும்; அடிப்படையாய் இருப்பது, அரசாள்பவரின் செங்கோல் நிலைநாட்டும் நெறியே ஆகும்.
(அது போல்...)
பொதுவாழ்வில் வென்றோர் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்திற்கும், அவர்களின் அன்புக்கும்; ஊக்கமாய் இருப்பது, குடும்பத்தின் உறவுகள் விதைக்கும் கருணையே ஆகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக