திங்கள், ஜனவரி 30, 2017

குறள் எண்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0547}

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

விழியப்பன் விளக்கம்: அரசாள்வோர், நாடு முழுவதையும் காப்பர்! அந்த அரசாள்வோரையும், நடுநிலையைத் தவறாத அவர்களின் செங்கோலே காக்கும்!
(அது போல்...)
போராளிகள், உரிமை யாவையும் நிலைநாட்டுவர்! அந்தப் போராளிகளையும், அறவழியை மீறாத அவர்களின் ஒழுக்கமே நிலைநாட்டும்!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக