திங்கள், ஜனவரி 23, 2017

அதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை

0531.  இறந்த வெகுளியின் தீதே சிறந்த
           உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: 
மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; 

           அளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
           மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த 
           அடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.
      
0532.  பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
           நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

           விழியப்பன் விளக்கம்: 
இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கி அழிப்பது போல்; 

           மறதியெனும் குறைபாடு, சிறப்பை அழிக்கும்.
(அது போல்...)
           தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, 
           மனிதத்தைச் சிதைக்கும்.
           
0533.  பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து 
           எப்பால்நூ லோர்க்கும் துணிவு

           விழியப்பன் விளக்கம்: 
மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமில்லை! 

           உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
           தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் அரிதானது! புவியிலுள்ள எவ்வித 
           சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.

0534.  அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
           பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

           விழியப்பன் விளக்கம்: 
ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை. 

           அதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை!
(அது போல்...)
           சந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்; 
           பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை!

0535.  முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
           பின்ஊறு இரங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: 
மறதியால், எதிர்வரும் துன்பங்களுக்கு முன்பே திட்டமிடத் 

           தவறுவோர்; துன்பங்கள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
           சோம்பலால், முதுமைப் பிணிகளுக்கு இளமையில் தயாராக மறுப்போர்; முதுமை வந்தபின், 
           தம் சோம்பலை நினைத்து வருந்துவர்.

0536.  இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
           வாயின் அதுஒப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: 
எவரிடத்திலும்/எந்நாளும் மறதியில்லாத நிலைப்பாடு, தவறாமல் 

           வாய்க்குமானால்; அதற்கு ஒப்பாக நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.
(அது போல்...)
           எப்படைப்பிலும்/எவ்விதத்திலும் குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து 
           இருக்குமானால்; அதற்கு ஈடாகப் பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.

0537.  அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
           கருவியால் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: 
மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் 

           செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
           பின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; 
           தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.

0538.  புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
           இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

           விழியப்பன் விளக்கம்: 
"திருக்குறள்" போன்ற புகழப்பட்ட விடயங்களை, போற்றிப் பின்பற்ற 

           வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
           "மழலை" போன்ற அற்புதமான விடயங்களை, உணர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி 
           செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.


0539.  இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
           மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

           விழியப்பன் விளக்கம்: 
நம் பெருமகிழ்ச்சியால், மனவலிமை பெறும்போது; மறதியால் கெட்டு 

           அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
           நம் பெருந்தொழிலால், பொருளாதாரம் வளரும்போது; ஆணவத்தால் வாழ்வியல் 
           இழந்தவர்களை, நினைவு கூறவேண்டும்.

0540.  உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
           உள்ளியது உள்ளப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: 
நம் இலக்கை மறவாமல், உறுதியோடு இருப்பின்; எண்ணிய 

           இலக்கை அடைவது, மிக எளிதாகும்.
(அது போல்...)
           நம் பிறப்பை இகழாமல், நெறியோடு வாழ்ந்தால்; பிறவியின் பயனை அடைவது, மிக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக