வியாழன், ஜனவரி 12, 2017

குறள் எண்: 0529 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0529}

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதற்கான காரணம் சரியற்றதென உணரும்போது, மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன் விளைவு  பாதகமானதென உணர்ந்தால், மீண்டு(ம்) இணைவர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக