சனி, ஜனவரி 14, 2017

குறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0531}

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

விழியப்பன் விளக்கம்: மகிழ்ச்சியான தருணத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; அளவுகடந்த கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; தொடர்ந்த அடிமைத்தனத்தை விட, அதீத ஆபத்தானது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக