செவ்வாய், ஜனவரி 17, 2017

குறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0534}

அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

விழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எந்த அரணும் பாதுகாப்பை அளிப்பதில்லை. அதுபோல்; மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மையைப் பயப்பதில்லை!
(அது போல்...)
சந்தேகம் உள்ளோர்க்கு, எந்த உறவும் நம்பிக்கையைத் தருவதில்லை. அதுபோல்; பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக