வெள்ளி, ஜனவரி 27, 2017

குறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0544}

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

விழியப்பன் விளக்கம்: குடிமக்களை அன்பால் தழுவி, செங்கோலை நிலைநாட்டி நாட்டை ஆளும் அரசாள்வோரின்; பாதையைத் தழுவி, மக்களும் நிலைபெறுவர்.
(அது போல்...)
குடும்பத்தை அறத்தால் பழகி, வாய்மையைப் போதித்துக் குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோரின்; இயல்பை பழகி, குழந்தைகள் வழிநடப்பர்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக