சனி, ஜனவரி 28, 2017

குறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0545}

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

விழியப்பன் விளக்கம்: சரியான செங்கோலுடன், அரசாங்கம் நடத்தும் மன்னரின் நாட்டில்; பருவமழையின் அளவும்/பயிர்களின் விளைச்சலும், ஒருசேர அதிகரிக்கும்.
(அது போல்...)
உறவின் அடிப்படையுடன், இல்லறம் நடத்தும் மனிதர்களின் ஊரில்; அறச்செயலின் அளவும்/மனிதத்தின் ஆக்கமும், சரியாய் கலந்திருக்கும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக