வெள்ளி, ஜனவரி 20, 2017

குறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0537}

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

விழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
பின்வாங்குதலை அழிக்கும் உறுதியான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக