வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

குறள் எண்: 0005 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0005}
                               

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு  

விழியப்பன் விளக்கம்: இறைவனின் பகுத்தறிவைப், பெருமையுடன் புகழ்ந்து பரப்புவோரை; "எது அறம்? எது அறமல்ல?" போன்ற இருவினை குழப்ப-இருள் சூழாது.

(அது போல்...)

சான்றோரின் மெய்யறிவை, உண்மையுடன் பணிந்து தொடர்வோரை; "மின்னுவது பொன்னா? இல்லையா??" போன்ற சந்தேக-இருள் சூழாது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக