செவ்வாய், ஆகஸ்ட் 18, 2015

குறள் எண்: 0016 (விழியப்பன் விளக்கவுரை)

  
{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0016}
                              


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

விழியப்பன் விளக்கம்: விண்ணிலிருந்து விழும் மழைத்துளி இல்லையென்றால்; பின் இவ்வையகத்தில் ஒரு பச்சைப்புல் முளைப்பதைக் கூட பார்க்கவியலாது.

(அது போல்...)

அடிமனதிலிருந்து வெளிப்படும் உன்னத-அன்பு இல்லையெனில்; பின் இவ்வுலகில் ஒரு உண்மையான ஊறவைக் கூட பார்க்கமுடியாது.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக