திங்கள், ஆகஸ்ட் 10, 2015

குறள் எண்: 0008 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0008}
                                 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது 

விழியப்பன் விளக்கம்: கடலளவு அறநெறிக் கொண்டவனைப் (இறைவனைப்) பின்பற்றுவோர் தவிர்த்து; மற்றவர் இன்னபிற நெறிக்கடல்களை நீந்திக்கடத்தல் கடினம்.

                                                               (அது போல்...)

"ஒருவனுக்கு ஒரு-மாது" என்பதைத் தவம்போல் கடைபிடிப்போரைப் பின்தொடர்வோர்க்கு; மது/சூது என்ற இரண்டையும் கடந்து செல்வது சிரமமன்று.

*******

குறிப்பு: இன்னபிற நெறிக்கடல்கள் என்பதை நம் பெருந்தகை கூறியிருக்கும் "பொருள் (2), இன்பம் (3)" என்ற அடிப்படையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக