சனி, ஆகஸ்ட் 08, 2015

குறள் எண்: 0006 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0006}
                                

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்  

விழியப்பன் விளக்கம்: ஐம்புலன்களையும் பன்படுத்தியவனின் (இறைவனின்), பொய்தீர்த்த ஒழுக்கவழி பயணிப்போர்; நிலைத்து வாழ்வர்.

(அது போல்...)

ஐநிலங்களையும் உணர்ந்தவரின் (மண்-ஆய்வாளர்), அறிவார்த்த ஆலோசனையைப் பின்பற்றினால்; விவசாயம் நிலைத்திடும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக