புதன், ஆகஸ்ட் 12, 2015

குறள் எண்: 0010 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0010}
                                

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேராதார்

விழியப்பன் விளக்கம்: இறைவனின் பாதம் பணிந்தவரே பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடந்து, அடுத்த நிலை சேர்வர்; மற்றவர் பிறவியிலேயே நீந்திக்கொண்டிருப்பர்.

(அது போல்...)
                                                         
சரியான பாதையைப் பின்பற்றுவோரின் புகழ் மட்டுமே எல்லைகள் கடந்து பல நாடுகளிலும் எதிரொலிக்கும்; மற்றவரின் புகழ் சிறு-தெருவோடு உழன்றுகொண்டிருக்கும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக