சனி, ஆகஸ்ட் 15, 2015

குறள் எண்: 0013 (விழியப்பன் விளக்கவுரை)

 {பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0013}
                           

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விழியப்பன் விளக்கம்: விண்ணிலிருந்து பொழியும் மழை பொய்த்துவிட்டால், பரம்பிய கடல் நீரால் சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தில்; உணவேதுமின்றி பசி வருத்தும்.

                                                               (அது போல்...)

மனிதனிலிருந்து உதிக்கும் மனிதம் மரித்துவிட்டால்,  பெருகிய மனித இனத்தால் நிரம்பிய இந்த அகன்ற மண்ணுலகில்; அறமேதுமின்றி பயம் ஆக்கிரமிக்கும்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக