ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

குறள் எண்: 0007 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0007}
                               

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

விழியப்பன் விளக்கம்: தனக்கு ஒப்பெதுவும் இல்லாதவனின் (இறைவனின்) பாதம் பணிந்தவர்கள் தவிர்த்து; மற்றோரின் மனக்கவலையை மாற்றுதல் கடினம்.

(அது போல்...)

தன்-துறையில் ஒப்பற்று விளங்குபவரின் (சாதனையாளரின்) திறமையை உள்வாங்கியோர் தவிர்த்து; மற்றவரின் பணித்திறன் "உச்சம்-தொடல்" எளிதல்ல.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக