ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

குறள் எண்: 0014 (விழியப்பன் விளக்கவுரை)

 {பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0014}


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

விழியப்பன் விளக்கம்: விவசாயத்தால் கிடைக்கும் வருவாய் வளம், மழைக்குறைவால் பாதிக்கப்பட்டால்; உழவர்கள் நிச்சயமாய் ஏர்கொண்டு உழமாட்டார்.
(அது போல்...)
வரிமூலமாய் உயரும் அரசாங்க கருவூலம், வரிஏய்ப்பால் குறைந்துவிட்டால்; அரசு-இயந்திரங்கள் கண்டிப்பாக அறம்சார்ந்து இயங்காது.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக