திங்கள், ஆகஸ்ட் 03, 2015

திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை...       சிறிது காலமாகவே திருக்குறளுக்கு என்னுடைய பார்வையில் ஒரு விளக்கவுரை எழுதவேண்டும் என்பது எண்ண-வடிவிலேயே உழன்று கொண்டிருந்தது. சமீப காலமாய் என் நட்புகளும், அதை தொடர்ந்து வலியுறுத்த - அதை இன்று ஆரம்பித்திருக்கிறேன். அட... இந்த வரியை எழுதும்போது தான், இன்று என்னவளின் பிறந்து நாளும் ஆயிற்றே என்ற எண்ணம் வந்தது. இது எதேச்சையாய் அமைந்த ஒற்றுமை; ஆனால், நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றுதான்.

   முடிந்தவரை... தினமும் ஒரு திருக்குறள் என்ற அடிப்படையில் விளக்கம் சொல்லவே திட்டம் வகுத்திருக்கிறேன். பார்ப்போம்... எத்தனை வைராக்கியமாய் அதை செய்ய முடிகிறது என்று? மற்ற படைப்புகளைப் போல், இந்த "மாபெரும் முயற்சிக்கும்" உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்; சரியான-வழிகாட்டுதலையும்; நேர்மையான-விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன். என்னால் முடிந்த வரை, ஒரு சரியான பார்வையில் இந்த விளக்கவுரை இருப்பதில் கவனம் செலுத்துவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக