வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

குறள் எண்: 0012 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0012}
                            

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விழியப்பன் விளக்கம்: விண்ணிலிருந்து தூறும் மழை - உண்பவர்களுக்குத் தேவையான உணவை,  உற்பத்தி செய்ய உதவுவது மட்டுமல்ல; தானுமே ஓர் உணவாகிறது.

                                                                        (அது போல்...)

குடும்பத்திலிருந்து உழைக்கும் தாய் - உயிர்ப்பவர்களுக்குத் தேவையான அணுக்களை, கருவறை கொடுத்து உயிர்ப்பிப்பது மட்டுமல்ல; தானுமே ஓர் அணுவாகிறாள்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக