வியாழன், ஆகஸ்ட் 13, 2015

குறள் எண்: 0011 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 002 - வான் சிறப்புகுறள் எண்: 0011}


வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விழியப்பன் விளக்கம்: விண்ணிலிருந்து இடையறாத பொழிதலால், உலகைக் காத்து வருதலால்; மழையை, சாகாமருந்தென உணர்தல் தன்மையாம்.

(அது போல்...)

வீட்டிலிருந்து ஓயாத அக்கறையால், குடும்பத்தை உயிர்ப்பித்து வருவதால்; தாயை, உயர்சக்தியென நினைத்தல் சிறந்ததாம்.

*****

இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக