செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

குறள் எண்: 0009 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 01 - பாயிரவியல்; அதிகாரம்: 001 - கடவுள் வாழ்த்து; குறள் எண்: 0009}


கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

விழியப்பன் விளக்கம்: எட்டு-சீர்மிகு குணங்களைக் கொண்டவனின் (இறைவனின்) பாதத்தை வணங்காதவன் தலை; சரியாய் உபயோகிக்கப்படாத புலன்களைப் போன்றது.

(அது போல்...)

எட்டு-திசையில் வெற்றிகளைக் குவித்தவரின் (மன்னர்கள்) வரலாற்றை அறியாதோரின் பிறப்பு; முழுமையாய் முடிக்கப்படாத ஓவியங்களைப் போன்றது.

*****

குறிப்பு: எண்குணங்கள் எவை?

பாரதி குறிப்பிட்ட எண்குணங்கள்: 1. அனந்தஞானம் 2. அனந்த வீரியம் 3. அனந்த குணம் 4. அனந்த தெரிசனம் 5. நாமமின்மை 6. கோத்திரமின்மை 7. அவாவின்மை 8. அழியாயியல்பு

இணையத்தகவல் அடிப்படையில் நான் வரையறுப்பது: 1. உலகின் முதன்மையாய் இருத்தல், 2. பகுத்தறிவைக் கொண்டிருத்தல், 3. மலர் மீதும் அமரக்கூடிய திறன், 4. "விருப்பு/வெறுப்பு" இல்லாத தன்மை, 5. பெரும்புகழ் கொண்டிருத்தல், 6. ஐம்புலன்களை அடக்கும் திறன், 7. உப்பில்லாமல் இருத்தல், மற்றும் 8. "கடலளவு" அறம் கொண்டிருத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக