வியாழன், பிப்ரவரி 02, 2017

குறள் எண்: 0550 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0550}

கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்

விழியப்பன் விளக்கம்: கொடியவர்களை, கொலைக்கு நிகரான தண்டனையால் அரசாள்பவர் தண்டிப்பது; சுற்றியிருக்கும் பசும்பயிரைக் காப்பாற்ற, களையைப் பிடுங்குவதற்கு நிகராகும்.
(அது போல்...)
ஊழல்வாதிகளை, பிணத்துக்கு இணையான ஒப்பீட்டால் பொதுமக்கள் ஒதுக்குவது; ஒளிந்திருக்கும் அழகை வெளிக்கொணர, தங்கத்தைச் சுடுவதற்கு ஒப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக