வியாழன், பிப்ரவரி 23, 2017

குறள் எண்: 0571 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0571}

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: பொதுவாழ்வில் ஈடுபடுவோரிடம், வலிமையானப் பேரழகான; மனிதம் இருப்பதால் தான், இவ்வுலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.
(அது போல்...)
குடும்பத்தில் இருப்போரிடம், நிலையானப் பேரன்பான; உறவு இருப்பதால் தான், இல்லறம் மலர்ச்சியுடன் தொடர்கிறது.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக