செவ்வாய், பிப்ரவரி 21, 2017

குறள் எண்: 0569 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0569}

செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

விழியப்பன் விளக்கம்: போர் போன்ற நெருக்கடியான சூழலுக்கு, முன்பே பாதுகாப்பு செய்யாத அரசாள்பவரின் ஆட்சி; பயம் அடைந்து, விரைவில் அழியும்.
(அது போல்...)
வேலையிழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு, முன்னரே ஏற்பாடு செய்யாத தலைமையின் குடும்பம்; வறுமை கொண்டு, வேகமாய் தடம்புரளும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக