ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

குறள் எண்: 0553 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0553}

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்

விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு நாளும் - ஆராய்ந்தறிந்து முறையான செங்கோலைச் செலுத்தாத, அரசாள்பவரின் நாடு - ஒவ்வொரு நாளும், தன் வாழ்வியலை இழக்கும்.
(அது போல்...)
ஒவ்வொரு நிலத்தையும் - போற்றிக்காத்து இயற்கையான விவசாயத்தை செய்யாத, இனத்தின் சந்ததி - ஒவ்வொரு பாரம்பரியத்தையும், தன் வழக்கிலிருந்து இழக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக