புதன், பிப்ரவரி 15, 2017

குறள் எண்: 0563 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0563}

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை மிரட்டிச் செயல்களைச் செய்யும், கொடுங்கோலராய் ஆட்சியாளர் இருப்பின்; அவரின் ஆட்சி உறுதியாய் விரைவில் கெட்டழியும்.
(அது போல்...)
மாணாக்கர்களை வதைத்துத் தண்டனைகளை அளிக்கும், கொடுமனத்தராய் ஆசிரியர் இருப்பின், அவரின் வேலை நிச்சயமாய் உடனே பறிபோகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக