சனி, பிப்ரவரி 25, 2017

குறள் எண்: 0573 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0573}

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்

விழியப்பன் விளக்கம்: பாடலின் பொருளோடு பொருந்தவில்லை எனில், இசையால் என்ன பயன்? கருணையின் அடிப்படையோடு தோன்றவில்லை எனில், கண்ணால் என்ன பயன்?
(அது போல்...)
ஒழுக்கத்தின் இயல்போடு பயணிக்கவில்லை எனில், சமூகத்தால் என்ன பயன்? அன்பின் அடிப்படையோடு அரவணைக்கவில்லை எனில், பெற்றோரால் என்ன பயன்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக