வெள்ளி, பிப்ரவரி 03, 2017

குறள் எண்: 0551 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0551}

கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

விழியப்பன் விளக்கம்: பொதுமக்களை அலைக்கழித்து, அறமல்லவைச் செய்து பழகும் அரசாள்பவர்; கொலைச் செய்வோரை விட, அதீத கொடுமையானவர் ஆவர்.
(அது போல்...)
உறவுகளை வெறுத்து, வாய்மையல்லவைப் பேசி ஒதுக்கும் உறவினர்; கையூட்டுப் பெறுவோரை விட, மிக ஆபத்தானவர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக