செவ்வாய், பிப்ரவரி 07, 2017

குறள் எண்: 0555 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0555}

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

விழியப்பன் விளக்கம்: துன்பத்தில் ஆழ்ந்து, தேறமுடியாமல் அழும் பொதுமக்களின் கண்ணீர்தானே; கொடுங்கோல் புரியும் அரசாள்பவரின், செல்வத்தை அழிக்கும் ஆயுதம்?
(அது போல்...)
வாழ்வியல் தொலைந்து, தங்கமுடியாமல் அலையும் விலங்குகளின் சாபம்தானே; காடழிக்கும் குணமுடைய இனத்தின், ஆணிவேரை வெட்டும் கோடரி?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக