புதன், பிப்ரவரி 01, 2017

குறள் எண்: 0549 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0549}

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்

விழியப்பன் விளக்கம்: பிறரிடமிருந்து குடிமக்களைக் காத்துப் பேணுவது போல்; தவறானோரைத் தண்டித்துக் குற்றங்களைக் களைவதும், அரசனின் தொழிலே! அது குற்றமல்ல!
(அது போல்...)
தீமைகளிலிருந்து பிள்ளைகளை விலக்கி வளர்ப்பது போல்; தவறுகளைக் கண்டித்துத் தீயவற்றை நீக்குவதும், பெற்றோரின் கடமையே! அது தவறல்ல!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக