சனி, பிப்ரவரி 04, 2017

குறள் எண்: 0552 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 056 - கொடுங்கோன்மை; குறள் எண்: 0552}

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு

விழியப்பன் விளக்கம்: செங்கோல் ஏந்திய அரசாள்வோர், மக்களின் உடைமைகளை வேண்டுவது; அரிவாள் ஏந்திய கொள்ளையர், வழிப்போக்கரின் பொருட்களைப் பறிப்பது போன்றதாகும்.
(அது போல்...)
வேலை செய்யும் பிள்ளைகள், பெற்றோரின் ஓய்வூதியத்தைக் கேட்பது; வேலை அளிக்கும் முதலாளிகள், பணியாளர்களின் சம்பளத்தை அபகரிப்பது போன்றதாகும்.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக