புதன், பிப்ரவரி 22, 2017

குறள் எண்: 0570 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 057 - வெருவந்த செய்யாமை; குறள் எண்: 0570}

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

விழியப்பன் விளக்கம்: அச்சுறுத்தும் வகையில் நடைபெறும் அரசாட்சி, அறநெறிப் பயிலாதோரை துணை சேர்க்கும். அதைவிட, ஒரு நாட்டிற்கு பெருஞ்சுமை வேறேதுமில்லை!
(அது போல்...)
சூறையாடும் வழியில் நடக்கும் வணிகம், இரக்கம் அறியாதோரை தரகர்களாய் நியமிக்கும். அதைவிட, ஒரு சமுதாயத்திற்கு பெருங்குறை வேறேதுமில்லை!
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக