ஞாயிறு, பிப்ரவரி 26, 2017

குறள் எண்: 0574 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்; குறள் எண்: 0574}

உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்

விழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையை, அடிப்படையான அளவில் கூட வெளிப்படுத்தாத கண்கள்; வெறுமனே முகத்தில் இருப்பதை விட, அவற்றால் என்ன பயன்?
(அது போல்...)
வாய்மையெனும் நெறியை, ஆபத்தான நிலையில் கூட தூண்டாத மூளை; வெறுமனே தலையில் இருப்பதை விட, அதனால் என்ன பயன்?
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக