திங்கள், ஆகஸ்ட் 01, 2016

குறள் எண்: 0365 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0365}

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

விழியப்பன் விளக்கம்: துறந்தவர் என்போர், ஆசையைத் துறந்தவர் ஆவர்; மற்றவர்கள், முழுமையாக துறந்த துறந்தவர்கள் ஆகமாட்டார்கள்.
(அது போல்...)
மனிதர்கள் என்போர், மிருக-குணத்தை நீக்கியோர் ஆவர்; பிறர், பரிணாம வளர்ச்சியடைந்த மனிதர்கள் ஆகமாட்டார்கள்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக