வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

குறள் எண்: 0369 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 1 - அறத்துப்பால்; இயல்: 03 - துறவறவியல்; அதிகாரம்: 037 - அவா அறுத்தல்; குறள் எண்: 0369}

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்

விழியப்பன் விளக்கம்: துன்பங்களில் கொடிய துன்பமான, ஆசை அழிந்திடின்; எந்த இடையூறுமின்றி, இன்பம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
(அது போல்...)
ஊழல்களில் அபாய ஊழலான, கல்வி-ஊழல் குறைந்திடின், எவ்வித தடையுமின்றி, தேசம் முன்னேறிக் கொண்டேயிருக்கும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக